விமானத்தில் பயணியை கன்னத்தில் அறைந்த சக பயணி

Update: 2025-08-02 09:44 GMT

இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் சக பயணியை அறைந்ததால் பரபரப்பு

மும்பையில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர் மற்றொரு பயணியை திடீரென கன்னத்தில் அறைந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாதிக்கப்பட்ட நபர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், விமானப் பணிப்பெண்கள் அவருக்கு உதவி செய்தபோது திடீரென இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அறைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இண்டிகோ நிறுவனம், சம்பவம் குறித்த முழு விவரம் உடனடியாக தெரியவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபரை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்