அப்பா, மகன், அக்கம் பக்கத்தினரை கடித்த நாய் பறிபோன தந்தை உயிர் - அதிர வைக்கும் விபரீதம்
சேலம் அருகே வளர்ப்பு நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் தாக்கியதில் தறித்தொழிலாளி உயிரிழந்துள்ளார். இலவம்பாளையம் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பரை, 3 மாதங்களுக்கு முன்னர் அவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. வளர்ப்பு நாய் தானே என கவனக்குறைவாக இருந்த குப்புசாமி சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட குப்புசாமிக்கு ரேபிஸ் நோய் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே அந்த நாய் குப்புசாமியின் மகன், அண்டை வீட்டாரை கடித்த நிலையில், அவர்கள் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ரேபிஸ் நோய் தாக்கவில்லை என தெரியவந்துள்ளது.