ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஹைட்ரோ கார்பன் பணி நடக்காது என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் அலுமனேந்தல் பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டும் பணி நடைபெற்றது. ஆத்திரமடைந்த விவசாயிகள் இயந்திரங்களை முற்றுகையிட்டு கிணறு தோண்டும் பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.