பிரபல கால்பந்து வீரருக்கு கொரோனா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2025-06-08 17:05 GMT

பிரேசிலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் காணப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பதாகவும் நெய்மர் விளையாடும் கால்பந்து கிளப் கூறி உள்ளது. நெய்மர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்