கூமாபட்டி வாலிபருக்கு எதிராக குரல் எழுப்பிய குடும்பத்தினர்...!

Update: 2025-07-02 07:40 GMT

உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக கூமாபட்டியில் இருந்து வாலிபர் ஒருவர் அட ஏங்க உங்களுக்கு காதல் தோல்வியா கூமாபட்டிக்கு வாங்க தலைவலியா கூமாபட்டிக்கு வாங்க கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க என கூமாபட்டியை புகழ்ந்து பேசி இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார். இந்த நிலையில், கூமாபட்டிக்கு போனா எல்லாமே சரியாயிடும்னு இளைஞர்கள் முதல் பெருசுகள் வரை எல்லாரும் கூமாபட்டிக்கு படையெடுத்தனர். இதையடுத்து அந்த கூமாபட்டியில் உள்ள பிளவுகள் அணையானது தமிழக அரசால் உள்ளே நுழைய தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் வைத்து இன்ஸ்டா பிரபலம் தனது குடும்பத்தினரிடம் சேர்ந்து "அட ஏங்க...! அது என்னங்க எப்ப பார்த்தாலும் கூமாபட்டி, கூமாபட்டினு, சொல்றீங்க..! நீங்க திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்து இருக்கீங்களா..? உங்களுக்கு கல்யாணம் ஆகலையா...? திருச்செந்தூருக்கு வாங்க, உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா? திருச்செந்தூருக்கு வாங்க, உங்களுக்கு STRESS -ஆ? திருச்செந்தூருக்கு வாங்க, உங்களுக்கு டிப்ரசனா? திருச்செந்தூருக்கு வாங்க, இங்க பின்னாடி இருக்கு பாத்தீங்களா... இந்த கடல் தண்ணிய குடித்தால் சர்பத்து மாதிரி இருக்கும் என கூமாபட்டி வாலிபருக்கு எதிராக திருச்செந்தூர் கடற்கரையில் நின்று வெளியிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்