சேலத்தில் அதிகொடூரம் - நகைக்கடையில் ஆசிட் அடித்து கொள்ளை.. இதயத்தை நடுங்கவிடும் காட்சி

Update: 2025-08-08 08:39 GMT

சேலத்தில் அதிகொடூரம் - நகைக்கடையில் ஆசிட் அடித்து கொள்ளை.. இதயத்தை நடுங்கவிடும் காட்சி

நகைக்கடை ஊழியர்கள் மீது ஆசிட் ஊற்றி நகைகள் கொள்ளை - பகீர் காட்சி

நகைக்கடையில் ஊழியர்கள் மீது ஆசிட்டை பீய்ச்சி அடித்துவிட்டு, ஆசாமி ஒருவர் நகைகளுடன் ஓட்டம் பிடித்த பகீர் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆத்தூர் கடைவீதி பகுதியில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில், நகை வாங்குவது போல் ஒருவர் சென்றார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த ஆசிட்டை ஊழியர்கள் மீது பீய்ச்சி அடித்தார். பின்னர், 80 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு, ஓட்டம் பிடித்தார். தன்னை பிடிக்க முயன்ற நபர்களை, துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு துரத்திச் சென்று, அந்த நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்