ரயிலில் கழிப்பறையின் அவலம் - பயணி வெளியிட்ட வீடியோ
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிப்பறை சுத்தமாக இல்லை என, பயணி வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஷாலிமார் நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிப்பறை முறையாக சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்வே நிர்வாகத்திடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.