வெடித்து சிதறிய மின்சார கேபிள் - தீப்பிழம்பான மின்கம்பம்

Update: 2025-06-22 10:39 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உயர் அழுத்த மின்சார கேபிள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவில்பதாகை அருகே உள்ள அசோக்நகர் விரிவாக்கம் பகுதியில் மின் கசிவு காரணமாக உயர் அழுத்த மின்சார கேபிளில் திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது.

கேபிள் தீ பிடித்து வெடித்து சிதறியதால் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்