ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் பரிந்துரைப்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீட்டை ஏழரை சதவீதத்தில் இருந்து, 10 சதவீதம் வரை உயர்த்துவது குறித்து சட்ட விதிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, தமிழிசை செளந்தரராஜன் போன்றவர்கள், அரசுக்கு உறுதுணையாக இருந்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.