Erode | அலப்பறை செய்த காட்டு யானை.. சாலையில் தேடுதல் வேட்டையில் இறங்கியதால் பரபரப்பு

Update: 2025-10-31 11:11 GMT

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடி அருகே சரக்கு லாரியை வழிமறித்த காட்டு யானை, கரும்பு உள்ளதா என தும்பிக்கையால் தேடிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சத்தியமங்கலம், மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அவ்வழியே சென்ற சரக்கு லாரியை, காட்டு யானை ஒன்று வழி மறித்து உணவு தேடியுள்ளது. தொடர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களை யானைகள் வழி மறிப்பதால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்