Erode | TN Police | வைரலாக நினைத்து அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய இளைஞர்கள் | எச்சரித்த போலீசார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போக்குவரத்து காவலர்களிடம் பேட்டி எடுத்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார் கண்டித்துள்ளனர். அந்தியூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற இளைஞர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறி போக்குவரத்து காவலர்களிடம் பேட்டி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பவே, போலீசார் இளைஞரை அழைத்து வீடியோவை நீக்கும்படி கண்டித்துள்ளனர். இதே இளைஞர் சில தினங்களுக்கு முன்பு, குரங்கிற்கு பிஸ்கட் கொடுப்பதாக வீடியோ வெளியிட்ட போது, வனத்துறையினர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது...