Erode | Car | வாய்க்காலில் பாய்ந்த கார்.. ஒருவர் மாயம் - பதற வைக்கும் மீட்பு காட்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செண்பகப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் தனது நண்பர்களான பிரபாகரன், ரங்கசாமி ஆகியோருடன் கீழ்பவானி வாய்க்கால் கரையில் மது அருந்தி விட்டு, அங்கு கார் ஓட்ட பழகியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது. இதில் பிரபாகரனும், ரங்கசாமியும் நீச்சல் அடித்து உயிர் தப்பினர். மாயமான பிரகாஷை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.