``கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கிறார் EPS’’ CPI மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த ஈபிஎஸ் மலிவான முயற்சி
திமுக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த வேண்டும் என்ற மலிவான நோக்கத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார் என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், கூட்டணியில் இருந்தாலும், நியாயமான கோரிக்கைகளையும் விமர்சனங்களையும் வைக்க ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் தவறியது கிடையாது என்று தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்