நுழைவாயில் இடிப்பு விவகாரம் - நகர்மன்ற கூட்டத்தில் திமுக vs அதிமுக, பாஜக வாக்குவாதம்
நுழைவாயில் இடிப்பு விவகாரம் - நகர்மன்ற கூட்டத்தில் வாக்குவாதம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், பழமையான நுழைவு வாயிலை இடிப்பது தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில், அவசரக் கூட்டம் மன்றத் தலைவி ராமலக்ஷ்மி தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கோட்டை நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள 150 ஆண்டுகால பழமையான நுழைவு வாயிலை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முழுமையாக இடிக்காமல் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.