ஆங்கில ஆசிரியர் செய்த அசிங்கம் | பறந்த புகார் | சிறையில் அடைத்த போலீசார்
12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, ஆங்கில ஆசிரியர் ரஞ்சித் குமார் என்பவர் வகுப்பறையில் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிகிறது. மேலும் மாணவியின் செல்போனுக்கு, ஆசிரியர் குறுஞ்செய்தியும் அனுப்பியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன்பேரில், விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.