திருவண்ணாமலையில் நடைபெற்ற காதணி விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு, சிறுமி உட்பட 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
போளூர் டவுன் பகுதியில் நடைபெற்ற சத்யராஜ், சங்கதா தம்பதியின் இல்ல காதணி விழாவில், சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். ரக்ஷிதா என்ற சிறுமி உட்பட தரணிஷ், சிபிஷ்ராஜ் ஆகிய 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தினார். இதையடுத்து பேசிய திருமாவளவன், பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர்களை படிக்க வைப்பதற்காகவே பெற்றோர்கள் வாழ வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.