எதிரிகளை அலறவிடும் Nagastra-1R - இந்தியா களமிறக்கும் த*கொ*ல படை ட்ரோன்ஸ்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 450 எண்ணிக்கையிலான “நாகஸ்திரா-1ஆர்“ என்ற சிறிய விமான குண்டுகளை வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. 'நாகஸ்திரா-1ஆர்' குட்டி விமானங்கள் பறக்கும் போது எதிரியை கண்காணிக்கவும், தேவையான போது தானாகவே வெடிக்கவும் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்ரக கேமரா, தெர்மல் கேமரா, குறும்படங்களை அனுப்பும் வசதிகளும் இந்த குட்டி விமானத்தில் உள்ளன. லடாக் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.