Electricity Bills | "2 மாத கரண்ட் பில்லே 1 லட்சம் கிட்டயா" ஷாக்கில் சென்னை குடும்பம்
Electricity Bills | "2 மாத கரண்ட் பில்லே 1 லட்சம் கிட்டயா" ஷாக்கில் சென்னை குடும்பம்
சென்னை அம்பத்தூரில் வசிக்கும் நபரின் வீட்டு மின்கட்டணம் 2 மாதங்களுக்கு 91 ஆயிரத்து 993 ரூபாய் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் வழக்கமாக 2 மாதத்திற்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் மின் கணகெடுப்பின்படி அவரது வீட்டில் கடந்த ஜூலை 8 ஆயிரத்து 370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக 91 ஆயிரத்து 993 ரூபாய் மின்கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரிற்கு விளக்கம் அளித்துள்ள மின்வாரியத்துறை மீட்டர் ரீடிங் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி, தவறு நடந்திருந்ததால் உரிய நவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.