Tirupur | நட்ட நடுவே நின்ற மின் கம்பம்.. அப்படியே போடப்பட்ட புதிய ரோடு - அதிர்ச்சியில் கிராம மக்கள்

Update: 2025-07-03 05:37 GMT

காங்கேயம் அருகே வானஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின் நடுவே அமைந்துள்ள

மின்கம்பத்தை நீக்ககூறி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே திருவிக நகர் பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளதால், வாகனஓட்டிகள் சிரமபடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் மீண்டும் புதுபிக்கப்பட்டு சாலை போடப்பட்டுள்ளது. இருப்பினும் மின்கம்பம் அகற்றபடாமல் உள்ளதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்