நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக் - பரபரப்பு காட்சிகள்
தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் சென்ற மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றியது. இதனால் வாகனத்தை அதன் உரிமையாளர் சாலையில் விட்டு விட்டு ஓடினார். பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் சில நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.