சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்பட்ட சென்னை புறநகர் மின்சார ஏசி ரயிலில் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்ததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தில் முதல்முறையாக முதல் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை புறநகர் ஏசி மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்நிலையில் முதல் நாளே மின்சார ஏசி ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து இருந்தது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.