கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பண்ணப்பள்ளி பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த முதியவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். கிருஷ்ணப்பா என்ற முதியவர் மாடு மேய்க்க சென்றபோது, அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. கிணற்றில் நீர் இல்லாத சூழலில், தீயணைப்புத்துறையினர் கிணற்றில் விழுந்த முதியவரை படுகாயங்களுடன் மீட்டனர். முதியவர் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.