மன அழுத்தத்தை குறைக்க தேர்வுக்கு முன்பாக இரவில் பெற்றோருடன் உரையாடுங்கள் என மாணவர்களுக்கு நடிகை தீபிகா படுகோனே அறிவுரை வழங்கியுள்ளார். மாணவர்கள் எவ்வாறு அச்சமின்றி தேர்வுகளை எதிர்கொள்வது என்பது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.