Durai Vaiko | கண்முன் துடித்த உயிர்கள்.. பதறிப்போய் காரில் இருந்து இறங்கி அனுப்பி வைத்த துரை வைகோ
விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்சில் அனுப்பி வைத்த துரை வைகோ தூத்துக்குடியில் சாலை விபத்தில் காயமடைந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன், பணியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பேச்சிராஜ் ஆகியோரை, நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தூத்துக்குடி, கோரம்பள்ளம் நான்கு வழிச்சாலையில் விபத்தில் காயமடைந்த இருவரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த துரை வைகோ, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் ராமகிருஷ்ணன், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.