தந்தி டிவி செய்தி எதிரொலி - குவாரி பணிகள் தற்காலிக நிறுத்தம்
காளையார் கோவில் அருகே கிராவல் குவாரியை மூட கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சுற்றி பல்வேறு கிராவல் குவாரிகள் இருக்கும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட குவாரி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாலும், 'கண்மாய் வரத்து கால்வாய்கள்' அருகே குவாரி இருப்பதால் மழைநீர் கண்மாய் வராமல் குவாரி பள்ளங்களில் நின்று விடுவதாலும், குடிதண்ணீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தந்தி டிவியில் கடந்த 9 ந்தேதி செய்தி ஒளிபரப்பானது.
இதன் எதிரொலியாக 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தத்தை முற்றுகையிட்டனர்.
புவியியல் மற்றும் சுரங்கதுறை இணை இயக்குநர் விஜயராகவன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் குவாரி பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.