சாலையில் நடந்து சென்றவரை தாக்கிய போதை இளைஞர்கள்

Update: 2025-04-17 06:05 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே போதையில் இருந்த இரு இளைஞர்கள், ஒருவரை சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியில் போதையில் இருந்த இரு இளைஞர்கள், அவ்வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்