காரில் பறந்து வந்த போதை ஆசாமிகள் - மின்கம்பத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே இளைஞர்கள் மதுபோதையில் ஓட்டி சென்ற கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செம்மங்காலை சாலையில் நடந்து சென்ற ஓமனா என்ற பெண் மீது அவ்வழியாக அதிவேக சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் அப்பெண் மின்கம்பத்தின் மீது மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில்,
பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.