Dowry Death வரதட்சணை கொடுமையால் உயிர் விட்ட மனைவி - கணவன் தண்டனையில் திடீர் திருப்பமாக வந்த உத்தரவு

Update: 2025-07-02 16:32 GMT

வரதட்சணை கொடுமையால் உயிர் விட்ட மனைவி - கணவன் தண்டனையில் திடீர் திருப்பமாக வந்த உத்தரவு

வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட விஸ்மயா வழக்கில், கிரண்குமாருக்கு ஜாமீன் வழங்கி, தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த விஸ்மயா வரதட்சணை கொடுமை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வழக்கில் அவரது கணவன் கிரண்குமாருக்கு 10 வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தனது சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், ஜாமீன் வழங்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்