குன்னூர் அருகே தெரு நாய்களுக்கு பயந்து மரத்திலேயே அமர்ந்து கொண்ட கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில், குன்னூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று உலா வந்துள்ளது.
அப்போது நவா மரத்தில் ஏறிய கரடியை, பார்த்து தெருநாய்கள் குறைத்து கொண்டே இருந்ததால் அச்சத்தில் உறைந்த கரடி நீண்ட நேரமாக மரத்திலேயே அமர்ந்து கொண்டது.இதையடுத்து நாய்கள் சென்றதை அடுத்து வனப்பகுதிக்குள் கரடி ஓடியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரவி வருகிறது.