மற்றத் துறைகளைப் போல, பணம் சம்பாதிக்கவே குடமுழுக்கு நடத்தப்படுவதாக இந்து அறநிலையத்துறை மீது தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா குற்றம்சாட்டி உள்ளார்.திருச்சி திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்தக் கோரி, தெய்வத் தமிழ் பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.