Doctors | இனி அவர்கள் `டாக்டர்’ இல்லை..அதிர்ச்சி உத்தரவு.. `டாக்டர்’ என போட்டால் சிக்கல்?
பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் பெயருக்கு பின்னால் டாக்டர் என்ற பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் ஒன்றும் மருத்துவர்கள் அல்ல என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டிருந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் மட்டுமே டாக்டர் பட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் வழிகாட்டுதல்கள் குறித்த விவகாரம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.