Chennai “Wonderla'' எவ்ளோ Rides இருக்கு தெரியுமா? முதல் நாள் சிறப்பு சலுகை
- சென்னையில் புதிதாக கட்டுப்பட்டுள்ள வொண்டர்லா ( wonderla) பொழுதுபோக்கு பூங்கா, டிசம்பர் 2 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் 64 ஏக்கர் பரப்பளவில் 611 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்காவை தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்களை கவரும் 43 சவாரிகள் உள்ளதாகவும், திறப்பு நாள் சலுகையாக டிசம்பர் 2ம் தேதி மட்டும் கட்டணம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.