அதிமுகவில் இருந்து வந்த அன்வர் ராஜாவுக்கு குறை வைக்காத திமுக

Update: 2025-07-25 03:07 GMT

அதிமுகவில் இருந்து வந்த அன்வர் ராஜாவுக்கு திமுகவில் தொடரும் சீனியாரிட்டி

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தாலும் தனக்கான சீனியாரிட்டி தொடர்வதாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அன்வர் ராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் நல்ல பழுத்த அரசியல் தலைவர்கள் உள்ளதாகவும், கருத்தியல் ரீதியான ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டது மனநிறைவை அளிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், திமுகவில் இணைந்த தனக்கான வரவேற்பில் எந்த குறையும் இல்லை, அதிமுகவில் இருந்து வந்தவர்கள் திமுகவில் அமைச்சராகவும், கட்சி பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கூறினார்...

Tags:    

மேலும் செய்திகள்