அமெரிக்கா வரிவிதிப்பு - திமுக கூட்டணி சார்பில் போராட்டம்
அமெரிக்க அரசின் வரி விதிப்பால் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக, பாஜக அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் செப்டம்பர் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி அம்பானிக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வரும் பாஜக அரசு, உள்நாட்டில் உள்ள சிறு வணிகர்களின் நலனை கவனத்தில் கொள்வதில்லை என்றும், வரி நிவாரணம் ஏதும் கொடுக்காமல் பாஜக அரசு முடக்கி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், வரும் செவ்வாய் கிழமை, 2ம் தேதி அன்று காலை, 10 மணி அளவில், திருப்பூர் ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.