தீபாவளியை ஒட்டி, சென்னை தியாகராய நகர் பகுதியில் புத்தாடைகள் வாங்க வருபவர்களுக்காக, வாகன நிறுத்தும் இடங்களை சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. தீபாவளிக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களால், தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில், தணிகாசலம் சாலை பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம், அன்பழகன் மேம்பாலத்தின் கீழ்பகுதி, பிரகாசம் சாலை மாநகராட்சி பள்ளி, தண்டபாணி தெரு ராமகிருஷ்ணா பள்ளி, சோமசுந்தரம் மைதானம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.