Diwali Gift | யாருக்கெல்லாம் தீபாவளி பரிசு?.. வெளியான சூப்பர் அறிவிப்பு
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்க்கரை உள்ளிட்ட 5 பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட உள்ளது. சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு, ரவை , மைதா அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கவுரவ அட்டைதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நீங்கலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.