ditwah cyclone || சென்னையில் முக்கிய கட்டிடத்தை சுற்றிவளைத்த மழைநீர்.. ``எவ்ளோ தண்ணீ..''
சென்னை கொரட்டூரில் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சத்தின் கீழ் இயங்கிவரும் ESI மருந்தகம் மற்றும் கிளை அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் டிட்வா புயல் காரணமாக அதிக அளவு மழை பெய்து வருவதால் வளாகம் முழுவதும் மழைநீர் இரண்டு அடிக்கும் மேலாக தேங்கியுள்ளது, இதனால் மருந்தகத்திற்கு செல்வோர் முழங்கால் அளவு நீரில் நடந்து சென்று மருந்துகளை பெற்றுக் கொண்டு திரும்புகின்றனர், ESI விடுப்பிற்கு விண்ணப்பிக்க வரும் ஆண்கள் பெண்கள் அனைவரும் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.மேலும் அலுவலகத்தில் நீர் சூழ்ந்துள்ளதால் மருந்துகள் நீரில் நனைந்து பாழகும் நிலை உள்ளது, மேலும் நீர் சூழ்ந்து இருப்பதால் ஊழியர்கள் செல்ல முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது