Ditwah Cyclone Name | `டிட்வா' புயலின் பெயருக்கு பின்னால் இவ்ளோ விஷயங்களா? - அசரவைக்கும் தகவல்கள்
டிட்வா புயலின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்தார். இந்த பெயரை ஏமன் நாடு வைத்துள்ளதாகவும், ஏமன் மொழியில் உள்ள டிட்வா என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் “லக்கூன்“ என்று பொருள். லக்கூன் என்பது ஒரு பெரிய நீர்பரப்புக்கு அருகே சில தடுப்புகள் காரணமாக உருவாகும் சிறிய நீர்பரப்பை குறிக்கும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் கடலுக்கு அருகே உருவாகியுள்ள ஏரியான பழவேற்காடு ஏரி, லக்கூனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.