முத்துமாரியம்மனுக்கு விநோத முறையில் நேர்த்திக்கடன்
கடலூரில் மிளகாய் பொடியை கரைத்து உடலில் ஊற்றியும், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை சுட்டும் முத்துமாரியம்மனுக்கு பக்தர்கள் விநோத முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுநகர் சாலக்கரையில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் செடல் உற்சவம் கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதியுலா நடைபெற்று செடல் உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, விரதமிருந்த திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர்.