நேருக்கு நேர் மோதிய தனியார் பேருந்துகள் - அலறல் சத்தம்.. உள்ளே இருந்த 15 பேரின் நிலை?

Update: 2025-02-26 04:43 GMT

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டைக்கு சென்ற பேருந்தும், வத்தலகுண்டில் இருந்து சின்னாளப்பட்டிக்கு வந்த பேருந்தும், மேலக்கோட்டை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்துகள் அதிவேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்