Digital Scam | மக்களே உஷார்..! ATM முன் நடந்த புதுவகை திருட்டு.. டெக்னாலஜி திருடனின் அசத்தலான Plan
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஏடிஎம் மையத்தில் ஃபோன்பே ஸ்கேனர் மூலம் பணம் அனுப்புவதாக கூறி 10 ஆயிரம் ரூபாயுடன் இளைஞர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுண்ணாம்புப்பேட்டை பகுதியை சேர்ந்த தைல வியாபாரி அருண்குமார் என்பவர் தனது பணத்தை டெபாசிட் செய்ய ஏடிஎம் சென்றார். அப்போது அங்கு வந்த இருவரில் ஒருவர், தனது தாயை மருத்துவமனையில் சேர்த்துள்ளதால் பணம் தேவைப்படுவதாகவும், ஃபோன்பே மூலம் அனுப்புவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அருண்குமார் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அந்த நபர், பணம் அனுப்புவது போல் நடித்து அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.