பழனி பக்தர்களுக்கு இன்ப செய்தி - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு | Palani Murugan Temple

Update: 2025-01-28 01:55 GMT

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு, தைப்பூசத் திருவிழா நாட்களில் பழனி நகரில் இலவச போக்குவரத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்