ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா உத்தரவு பிறப்பிக்கவில்லை என ப்ளூம்பெர்க் அறிக்கை
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதிலும் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்த சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எவ்வித உத்தரவையும் இந்தியா பிறப்பிக்கவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக Bloomberg அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னர் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதே போல், அமெரிக்கா அபராதத்துடன் கூடிய வரி விதிப்பை எதிர்கொண்ட போதிலும், இந்தியா ரஷ்யா கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கும் என நம்பத் தகுந்த இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.