திருவிளையாடல் படத்தின் வைர விழா - ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய சிவாஜி ரசிகர்கள்

Update: 2025-07-21 03:50 GMT

மதுரையில் திருவிளையாடல் படத்தின் வைர விழாவை, சிவாஜியின் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். மதுரை ராஜா முத்தையா மன்ற அரங்கில் நடைபெற்ற விழாவில், தமிழகம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சிவாஜி ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகள் மதுவந்தி, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு திருவிளையாடல் படத்தின் சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, தொடர்ஜோதியை எடுத்து வந்த ரசிகர்கள், சிவாஜி சிலை முன்பாக வைத்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்