நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த பின்னும் தாறுமாறாக சீண்டிய தர்மேந்திர பிரதான்
மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தமிழகத்திற்கு பி.எம்.ஸ்ரீ நிதி ஒதுக்கீட்டை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுதியான உண்மைகள் இல்லாதவர்கள், பரபரப்பை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள் என விமர்சித்தார். பி.எம் ஸ்ரீ திட்டம்,, அனைவருடைய நலனுக்குமானது என்றும் அவர் கூறினார்.