ஊருக்குள் புகுந்த பைக் கேங் ``குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை- ஒருவரையும் விடாமல் கொடூர தாக்குதல்''
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருதரப்பினர் மோதலில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எஸ்.தாதம்பட்டியை சேர்ந்த அச்சுதன் என்பவர், பாலகோட்டை கிராமம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நாய்க்குத்தி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன், மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் சென்றதாக தெரிகிறது. இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பூபாலன் தனது நண்பர்களுடன் எஸ். தாதம்பட்டி கிராமத்தில் பொங்கல் விழா நடந்த இடத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். இதில் அச்சுதன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பூபாலன், ரமேஷ், ராஜ்குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.