பொறுப்பு DGP பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்காத `DGP அந்தஸ்து' அதிகாரிகள்
பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்பில் பங்கேற்காத டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள்
தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்பு நிகழ்வில், டிஜிபி அந்தஸ்து அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தின் புதிய சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட வெங்கடராமன் பொறுப்பேற்றுக்கொண்டார். நிகழ்வில் ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் டிஜிபி அந்தஸ்து அதிகாரிகளான சீமா அகர்வால், வினித் தேவ் வான்கடே, சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப்பெருமாள், அபய் குமார் சிங் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்காதது காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.