Thiruvannamalai | தி.மலையில் மகளிர் விடியல் பயணம், புதிய குளிர்சாதன பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணம் மற்றும் 4 புதிய குளிர்சாதன பேருந்து சேவைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென்மாத்தூர் பகுதியில் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த அவர், ஆண்டாப்பட்டு பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்களுடன் உரையாடினார். அப்போது சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், குழுக்களின் மூலம் வரும் வருமானங்கள், செலவினங்கள் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.