அவதூறு வழக்கு..! நிர்மலா சீதாராமனுக்கு பறந்த நோட்டீஸ்

Update: 2025-05-23 15:31 GMT

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சோம்நாத் பார்தியின் மனைவி தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் பதிலளிக்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது, தனது கணவர் குறித்து அவதூறு கருத்துகளை நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாக கூறி, சோம்நாத் பார்தியின் மனைவி லிபிகா மித்ரா, கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பரஸ் தலால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்