ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்.. ஆடி வெள்ளியில் தனலட்சுமியாக ஜொலித்த அம்மன்
இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. திருச்சி வரகனேரி நித்தியானந்தபுரத்தில் உள்ள முத்துக்கண்மாரியம்மன் கோவிலில் இரண்டாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு அருட்பாலித்தார்.
மேலும் முத்துக்கண் மாரியம்மனுக்கும் 500 ரூபாய், 200 ரூபாய், 50ரூபாய், 10 ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.